மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
அஜித் நடித்த அசல் படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலை தாண்டியுள்ளது. சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்து கடந்த 6ம்தேதி வெளியான படம் அசல். ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படத்தில் அஜித் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அசலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் அசல் ரீலிஸ் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி 6ம்தேதி படத்தை திரையிட்டனர். உலகமெங்கும் 550 தியேட்டர்களில் அசல் படம் திரையிடப்பட்டது. மொத்தம் 41 நாடுகளில் ரீலிஸ் ஆன அசல் படம் தமிழகத்தில் மட்டும் 360 தியேட்டர்களில் ரீலிஸ் செய்யப்பட்டது.
பில்லா படத்தைப் போல அஜித் ரொம்பவே ஸ்டைலிஷாக நடித்திருக்கும் இந்த படம் சென்னையில் திரையிடப்பட்ட மூன்றே நாட்களில் ரூ.18 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்திருக்கிறது. அதோடு வரும் வியாழக்கிழமை வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் ஆர்வமுடன் படம் பார்த்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இப்போது வெளியாகியிருக்கும் கணக்கு உறுதி செய்யப்படாத தகவல் என்றும், விரைவில் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிடுவதாகவும் தயாரிப்பாளரும் நடிகருமான பிரபு கூறியிருக்கிறார்.